News October 25, 2024
கால்நடை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை இன்று முதல் மேற்கொள்ள உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக கரூர் மாவட்டத்தில் 3,78,121 குடியிருப்புகளில் இக்கணக்கெடுப்பை நடத்த 118 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 24 கால்நடை மேற்பார்வையாளர்களைக் கொண்டு கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு துல்லியமான விபரங்களை அளித்திட வேண்டும்.
Similar News
News August 19, 2025
கரூர்: டிகிரி முடித்தால் ரூ.35,900 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘Assistant Programmer’ பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.35,900 முதல் ரூ.1,32,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News August 19, 2025
கரூர்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

கரூர்: அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி மேற்கு தடா கோவிலைச் சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஆரியூர் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது தனது பர்ஸ் கிணற்றில் விழுந்ததால் அதை எடுக்கச் சென்று மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 19, 2025
கரூர் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

கரூர் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <