News October 25, 2025

கால்நடைகளை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மழையில் ஆடுகளை வெளியில் மேச்சலுக்கு ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு பண்ணையாளர்கள் ஆட்டுக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி அளிக்கலாம்.
நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவரை அணுகி பயன்பெறலாம். கால்நடை வளர்ப்போர் உரிய வழிமுறைகளை பின்பற்றி மழையில் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News October 26, 2025

கள்ளக்குறிச்சி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்<<>>.

News October 26, 2025

கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

சின்னசேலம் அருகே நைனார்பாளையத்தைச் சேர்ந்த நீலகிரி மின் ஊழியர் கொளஞ்சியப்பன் (47), தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். கனமழையால் வீட்டில் மின் விளக்குகள் எரியாத நிலையில், நேற்று மாலை மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் சுவிட்ச் போர்டை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

News October 26, 2025

கள்ளக்குறிச்சி: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலை மீட்பு!

image

கீழையூர், மாரியம்மன் கோயில் முன்புறத்தில், சாலையோரம் இருக்கும் புடைப்பு சிற்பத்தை பலரும் என்ன சிலை என தெரியாமலேயே வழிபட்டு வந்துள்ளனர். மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், கல்வெட்டு ஆர்வலர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது, 30 அங்குலம் உயரம், 26 அங்குலம் அகலம் கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை என தெரிய வந்தது. புடைப்பு சிற்பமான இதில் விரிசடையுடன் காதுகள் மற்றும் கழுத்திலும் அணிகலன்கள் அழகுற காணப்படுகிறது.

error: Content is protected !!