News January 8, 2026
காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்!

காலை உணவில் தயிரை சேர்த்து கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் ப்ரோ-பயோடிக் இருப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்யுமாம். இதனால், உடல் எடை குறைந்து, வயிற்று பிரச்னைகள் நீங்கி, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்க முழு உடலையும் பாதுகாக்கும் சூப்பர் ஃபுட்டாக தயிர் செயல்படுகிறது. இதனை நண்பர்களுக்கு பகிருங்கள்.
Similar News
News January 29, 2026
மாதவரம் பேருந்து–லாரி முனையத்தில் கடைகள் விற்பனை

மாதவரம் பேருந்து மற்றும் லாரி முனையத்தில் (MBTT) காலியாக உள்ள வணிகக் கடைகளை மின்னணு டெண்டர் (e-Tender) மற்றும் மின்னணு ஏலம் (e-Auction) முறையில் நேரடி விற்பனை செய்ய சிஎம்டிஏ (CMDA) அறிவித்துள்ளது. மொத்தம் 16 கடைகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றின் குறைந்தபட்ச விலை ரூ.27.18 லட்சம் முதல் ரூ.5.10 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த e-Auction முதலீட்டாளர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை உருவாகும்.
News January 29, 2026
2015-ல் வந்தது செயற்கை வெள்ளம்: CM ஸ்டாலின்

சென்னை பெருநகரில், ₹6,495 கோடியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் 2015-ல் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது இயற்கை எவ்வளவு மழை தந்தாலும் சமாளிக்கும் ஆற்றலை சென்னைக்கு உருவாக்கி உள்ளோம் என்றார். மேலும், மக்களின் தேவையை புரிந்துகொண்டு மெட்ரோ வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
ஒரே நாளில் வெள்ளி விலை கிலோ ₹25,000 உயர்ந்தது

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம் தொட்டு நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹25 உயர்ந்து ₹425-க்கும், 1 கிலோ வெள்ளி ₹25,000 உயர்ந்து ₹4.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடரும் விலை ஏற்றத்தால் வரும் நாள்களிலும் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


