News February 16, 2025

காலை இழந்த நடிகர் சிரிக்கோ உதயா 

image

நடிகர் சந்தானத்திற்கு நகைச்சுவை வசனங்கள் எழுதிய நகைச்சுவை நடிகர் ‘சிரிக்கோ உதயா’ நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது கால் அகற்றப்பட்டது. திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக இருக்கும் இவர், சிறந்த வயலின் இசைக்கலைஞர், மிமிக்ரி செய்வதில் வல்லவர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார்.

Similar News

News March 5, 2026

சென்னை: 2017-ல் குக்கர்… 2026-ல் விசிலா?

image

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி ஆர்.கே நகர் தொகுதி. 2017 இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று இந்திய அரசியலையே அதிரவைத்த களம் இது. வடசென்னையில் உள்ள இந்தத் தொகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாக்குகள் அதிகம். 2026-ல் TVK வடசென்னையில் போட்டியிட்டால் ஆர்.கே. நகர் மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.

News March 5, 2026

சென்னை: நடிகை உடை மாற்றும் போது எட்டிப் பார்த்த நபர்

image

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் 31 வயதான நடிகை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நடிகை உடைமாற்றும் போது ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பார்த்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. நடிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 5, 2026

விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் – ஜெயக்குமார்

image

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது விஜய் தன்னைப் போல பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும், எழுதிக் கொடுக்கப்பட்டதை வாசிப்பது போதாது என்றார். அரசு பணத்தை திமுக அதிகமாக செலவிட்டாலும் வரும் தேர்தலில் தோல்வியடையும் என்றும், 5 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!