News December 21, 2025
காலை அலாரம் அடிச்ச அப்புறம் தான் எழுந்திருக்குறீங்களா?

பலரும் காலை அலாரம் அடித்த பிறகே, எழுந்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென அதிக சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure அதிகரிக்கும். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய பிரச்னைகள் அதிகரிக்குமாம். இதனை, Morning Blood Pressure Surge என்கின்றனர். மெல்லிய இசையை அலாரமாக வைக்கலாம்.
Similar News
News December 27, 2025
சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,680 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹800 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 1 சவரன் தங்கம் ₹1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹5,600 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது.
News December 27, 2025
தவெகவில் நடிகர் கவுண்டமணி இணைந்து விட்டாரா? CLARITY

நடிகர் கவுண்டமணி தவெகவில் இணைந்துவிட்டதாக SM-ல் செய்தி பரவி வருகிறது. அத்துடன், அவருக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்பது போன்ற போட்டோவும் வைரலாகி வருகிறது. ஆனால், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த போட்டோவை எடிட் செய்து, சிலர் இப்படி தவறான தகவலை பரப்பியது தெரியவந்துள்ளது. விஜய் தற்போது மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
கவிதைகளால் வரைந்த ஓவியமே ஸ்ரீதிவ்யா

இன்ஸ்டாவில் ஆக்டிவா உள்ள ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பார்த்ததுபோல் அப்படியே இருக்கிறார். அதே பேசும் பார்வை, அதே மழலை சிரிப்பு, அதே கொஞ்சும் அழகு என கவிதைகளால் எழுதப்பட்ட ஓவியமாய் கண் முன்னே நிற்கிறார். இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


