News December 15, 2025
காலையில் Ghee Coffee குடிக்கலாமா?

டயட் உணவுகளில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒன்று Ghee Coffee. இது உண்மையிலே நல்லதா என கேட்டால், ஆம் என்கின்றனர் டாக்டர்கள். *பால் சேர்க்காமல், சுடு தண்ணீரில் காபி பவுடர், நெய் சேர்த்து குடிக்கும்போது, நீண்ட நேரம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. *நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு மூளைக்கு எரிபொருளாகி மன தெளிவை அதிகரிக்கிறது *குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது *பசியை குறைத்து, எடையை கட்டுப்படுத்துகிறது.
Similar News
News March 9, 2026
இந்தியாவின் போர் நாயகன் காலமானார்

1965-ல் இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்ற Ex ராணுவ அதிகாரி KG ஜார்ஜ்(95) வயது மூப்பால் காலமானார். ராணுவ தொலைத்தொடர்பு பிரிவில் இருந்த அவர், போர் உச்சத்தில் இருந்தபோது வாகா எல்லையில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றினார். அவரது அர்ப்பணிப்பை பாராட்டி மத்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ், கடைசி காலத்தை கோட்டயத்தில் கழித்துவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
News March 9, 2026
இலவசமாக வேலைக்கு ஆள்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆள்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 9, 2026
இதுதான் ஸ்டாலினின் உண்மை முகம்: EPS

CM ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறிவாலயத்தின் வாசலில் கைது செய்யப்பட்டதாக கூறி, EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலுக்கு முன் மக்களிடம் மனு கேட்டு அலைந்தவர், தனது ஆட்சியில் ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது ஸ்டாலினின் உண்மை முகத்தை காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.


