News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
Similar News
News February 10, 2026
காங்கிரஸிடம் CM பொறுமை காக்க இதான் காரணமா?

சீட் ஷேரிங்கில் திமுக கூட்டணிக்கு காங்., பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. ஆனால், காங்., எவ்வளவு ஆட்டம் காட்டினாலும், எந்த ஆக்ஷனும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின். இதற்கு, இண்டியா கூட்டணியை கட்டமைத்த தானே அதை உடைத்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதே காரணமாம். அதேநேரம் அவர்களுக்கான தொகுதிகளை உயர்த்தி வழங்கமுடியாது என்பதிலும் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
News February 10, 2026
செல்போன் ரீசார்ஜ்.. அட்டகாசமான ஆஃபர்

BSNL நிறுவனம் அண்மைக்காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான ரீசார்ஜ் ஆஃபர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், குறைந்தளவு டேட்டா பயன்படுத்துபவர்களுக்காக வெறும் ₹197-ல் புதிய பிளானை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. 42 நாள்கள் வேலிடிட்டியுடன் 300 நிமிட கால்ஸ், 4 GB டேட்டா, 100 SMS ஆகிய சேவைகளை இந்த பிளானில் பெறலாம். அதிக நாள்கள் சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க இந்த பிளான் பயனுள்ளதாக இருக்கும். SHARE IT.
News February 10, 2026
இறந்தவரின் ஆதார் அட்டையை என்ன செய்ய வேண்டும்?

இறந்தவர்களின் ஆதார் அட்டையை எக்காரணம் கொண்டும் எரிக்கவோ (அ) குப்பையில் போடவோ கூடாது. இறந்தவர்களின் ஆதார் எண்ணை முழுவதுமாக நீக்கும் வசதியை UIDAI இதுவரை ஆன்லைனில் செயல்படுத்தவில்லை. ஆனால், UIDAI வெப் மூலம் அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்யலாம். இறப்புச் சான்றிதழை பெறும்போது ஆதார் எண்ணையும் குறிப்பிடுங்கள்; பியூச்சரில் ஆதார் செயலிழப்பு வசதி அப்டேட் ஆகும்போது எளிதாக ஆதார் எண்ணை முடக்கலாம்.


