News February 9, 2026
காலையில் இதை சாப்பிட்டால் முடி உதிராது

இளம் வயதிலேயே பலரும் முடி உதிர்வு பிரச்னையால் அவதியடைகின்றனர். இது அவர்களை மன ரீதியாகவும் பாதிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னைக்கு ஜீன் ஒரு காரணமாக இருந்தாலும், உணவு முறையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் காலை உணவாக சில சத்தான உணவை எடுப்பதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம். அது என்னென்ன உணவு என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
Similar News
News February 18, 2026
BREAKING: அரசு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதால், நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் என்று அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார். 30 நாள்கள் நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, மார்ச் 21-ம் தேதி ரமலான் கொண்டாடப்படும் என்பதால், அன்று அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 18, 2026
AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்: NVIDIA தலைவர்

AI வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று NVIDIA நிர்வாகத் தலைவர் ஜெய் பூரி உச்சி மாநாட்டில் தெரிவித்தார். AI, வேலையிழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் வேண்டாம் என்றும், AI ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் எனவும் பேசியுள்ளார். இதனால், நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக மாறும். அதன்மூலம் அதிக மக்களை வேலையில் அமர்த்த முடியும் என்றும் தெரிவித்தார்.
News February 18, 2026
5 ராசிகளுக்கு எச்சரிக்கை

சூரிய கிரகணம் முடிந்துவிட்டாலும், அதன் தாக்கம் அடுத்த 15 நாள்களுக்கு நீடிக்கும் என்பதால், 5 ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்: *சிம்மம் – வாக்குவாதங்களை தவிர்க்கவும். *கன்னி-தேவையற்ற செலவுகள் ஏற்படும். பயணத்தின்போது கவனம் தேவை *விருச்சிகம்-முதலீடு, தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். *கும்பம்-மனநலம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை *மீனம்-நிதி இழப்பு, உடல்நலக் குறைவு ஏற்படலாம்.


