News November 27, 2024
காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

சேலத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு போக்குவரத்து செலவு உட்பட நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் மாதத்திற்கு 9 நாள்கள் என ஆண்டு முழுவதும் வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும். கடைசிநாள் 11.12.2024 ஆகும். மேலும், விபரங்களுக்கு 0427-2415966 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 22, 2025
விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு

பால் உற்பத்தி செய்ய கால்நடைகளுக்கான அடர் தீவனம், உலர் தீவனம்,பசுந்தீவனம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பால் கொள்முதல் விலை,விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை.
பசும் பால் மற்றும் எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்க வேண்டும்.செப்-22ல் சேலம் ஆவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஆர்.வேலுசாமி அறிவிப்பு
News August 22, 2025
7.5% இட ஒதுக்கீடு: சேலத்தில் 1,903 பள்ளி மாணவர்கள் பயன்!

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 22, 2025
ரூ.59.19 லட்சம் அபராதம் – அதிகாரிகள் தகவல்

சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,232 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூபாய் 59.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும், 215 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விபத்தை ஏற்படுத்திய 77 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.