News October 25, 2024

காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும் அதனை நிரப்ப கோரியும் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்டக் அதிமுக சார்பில் நாளை (அக்.26) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

Similar News

News February 16, 2026

மயிலாடுதுறை: இறைந்து கரை ஒதுங்கும் ஆமைகள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பழையாறு, பூம்புகார் உள்ளிட்ட 22 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது தரங்கம்பாடி தலுகா உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இந்த அரிய வகை ஆமை இனம் அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 16, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் ரூ.6000 முதல் ஊக்கதொகையும் வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்பும் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மாவட்ட திறன் அலுவலரை 04364 299790 அல்லது thiranagammyd@gmail.com என்ற இமெயில் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News February 16, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!