News September 25, 2025
காலாண்டு விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

காலாண்டு விடுமுறை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்துசிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் செப். 26, 27, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2,430 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து மேற்கண்ட நாட்களில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
Similar News
News September 25, 2025
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.
News September 25, 2025
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று கலெக்டர் சினேகா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பருவமழை காலத்திற்கு முன்பாக மழைநீர் வடிகால் ஓடைகள் எந்த நிலையில் உள்ளன என்பதை பார்த்து தகவல்கள் கேட்டறிந்தார். அப்போது உடன் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News September 25, 2025
செங்கல்பட்டு: நாளை மறுநாள்! மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 27-ம் தேதி பையனூரில் உள்ளவிநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் – ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 8th, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 9486870577 / 9384499848 என்ற எண்களை அழைக்கலாம். (ஷேர் பண்ணுங்க)