News April 4, 2026

காலம் இருக்கிறது, காட்சிகள் மாறும்: அண்ணாமலை

image

தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கூறியதால், தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். போட்டியிடவில்லை என்றாலும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன், தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை மே 4-க்கு பிறகு தெரிவிப்பேன் என்றும் அவர் கூறினார். ஆனால், ‘காலம் இன்னும் இருக்கிறது, காட்சிகள் மாறும்’ என்று கடைசியாக செக் பாயின்ட்டும் வைத்துள்ளார்.

Similar News

News April 13, 2026

I AM BACK.. கர்ஜனைக்கு தயாரான தோனி

image

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள KKR-க்கு எதிரான நாளைய போட்டியில் தோனி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக முதல் 4 போட்டிகளில் விளையாடாத அவர், தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இம்பேக்ட் பிளேயராக அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால் பிளேயிங் 11-ஐ CSK மாற்றணுமா? யாரை உள்ளே கொண்டு வரலாம்?

News April 13, 2026

5 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை

image

பிஹாரில் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், முகேஷ் என்ற கேண்டீன் காவலாளி, 5 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அலறல் சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 13, 2026

பெண் மீது தாக்குதல்… விஜய் கண்டனம்!

image

பொள்ளாச்சி அருகே வீட்டில் அனுமதியின்றி கட்சி ஸ்டிக்கரை ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், விசில் புரட்சியால் இனி தங்கள் கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் உள்ளனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் இத்தகைய அராஜக போக்கை தடுக்க வேண்டும் என ECI-யிடம் கோரியுள்ளார்.

error: Content is protected !!