News January 16, 2026
காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News March 31, 2026
ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

CM ஸ்டாலினின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்காக தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் சென்றார். அப்போது, சாலியமங்கலம் என்ற இடத்தில் அவரின் காரை மறித்து பறக்கும்படையினர் சோதனை செய்கின்றனர். ஏற்கெனவே, EPS, சீமான் ஆகியோரின் வாகனத்திலும் பறக்கும்படை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
மாம்பழத்தை கனிய விடாமல் தடுக்க ராமதாஸ் வியூகம்

அன்புமணி, ராமதாஸ் இடையிலான மோதல் தேர்தலிலும் நேரடியாக எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. சேலம் மேற்கு, விருத்தாசலம், மயிலாடுதுறை ஆகிய 3 தொகுதிகளில் அன்புமணி தரப்புடன் <<19519250>>ராமதாஸ் <<>>தரப்பு நேரடியாக மோதுகிறது. அதுவும், சேலம் மேற்கில் சிட்டிங் MLA-வான அருளே களமிறங்கிறார். ராமதாஸின் இந்த வியூகம், தேர்தல் வெற்றியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என பாமகவினரை கவலையடைய செய்துள்ளதாம். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
ஏர்போர்ட்டுக்கு நிலத்தை விற்று Helicopter வாங்கிய விவசாயி!

கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொடுக்கும் என்பார்கள். அப்படி, உ.பி., ஜேவார் பகுதி விவசாயி சிவம் பிரஜாபதிக்கு (26) ஜாக்பாட் அடித்துள்ளது. அவரின் நிலத்தை ஏர்போர்ட்டுக்காக கையகப்படுத்திய அரசு, அதற்கு ₹15 கோடி கொடுத்துள்ளது. உடனே நீண்டநாள் ஆசையான ஹெலிகாப்டர் வாங்கிவிட்டாராம். மீதி பணத்தை முதலீடு செய்துவிட்டு ஹாயாக இருக்கிறாராம். விரைவில் தாய்லாந்து ட்ரிப் போகவுள்ளதாகவும் கூறுகிறார். லக்கி மேன்!


