News November 27, 2025
கார் vs கர்சீப்: ஸ்டாலின் – EPS கடும் மோதல்

நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக PM-ஐ சந்திக்கிறேன் என EPS கூறினால், அரசு சார்பில் தானே வியர்க்காத அளவு நல்ல கார் ஏற்பாடு செய்து தருகிறேன் என CM ஸ்டாலின் சாடியிருந்தார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையை துடைக்க கர்சீப்பை கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா என EPS விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 27, 2025
நாகை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நிகழும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய சூழலில் நாகை மாவட்ட பெண்கள் எந்த ஒரு வகையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8903392839) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை மறக்கமால் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.
News November 27, 2025
ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.


