News April 19, 2025

கார் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் காவலாளி சித்தையன். இவர் டூவிலரில் வாழ்வாங்கிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் போது தூத்துக்குடியில் இருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

BREAKING சாத்தூர் பட்டாசு வெடி விபத்தில் பலி 10 ஆக உயர்வு

image

சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் ஜூலை.1 அன்று கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா (28) என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 5, 2025

பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை – போலீஸ்

image

அருப்புக்கோட்டை நகராட்சியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. சாலைகள், பேருந்து நிறுத்தங்களில் பேனர்கள் வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.‌ இந்நிலையில் அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது எனவும், ஏற்கனவே இருந்த பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டவுன் போலீசார் எச்சரித்துள்ளனர்.

News May 8, 2025

அரசு கல்லூரிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்புக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம். திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் உள்ளன.

error: Content is protected !!