News October 18, 2025
கார் கவிழ்ந்த விபத்தில் சேலம் தம்பதி உயிரிழப்பு!

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (58); வெள்ளி வியாபாரி. இவரது மனைவி கவிதா (49). இவர்கள், நேற்று காலை தங்களுக்கு சொந்தமான காரில், சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காலை, 8:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்தகார், இருளப்பட்டி கானியம்மன் கோவில் எதிரே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கணவன் -மனைவி இருவரும் உயிரிழந்தனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை!
Similar News
News December 11, 2025
ஓமலூரில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்!

சேலம்: ஓமலூர் காவல் நிலையத்தில் சிக்கனம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதே போல முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த விஜய்-மணிமேகலை மற்றும் பச்சினம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் அம்மாபேட்டை சேர்ந்த பூமிகா என மூன்று காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
News December 11, 2025
சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!முழு லிஸ்ட்

சேலத்தில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏற்காடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட், மரவனேரி,சின்னதிருப்பதி ,கொண்டப்பநாயக்கன்பட்டி,கன்னங்குறிச்சி கோரிமேடு, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், 4 ரோடு, பள்ளப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருவாக்கவுண்டனுார் பைபாஸ்பின்புறம், உழவர் சந்தை, புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!