News September 27, 2025
கார்களை விற்று தள்ளும் மாருதி

GST வரி குறைப்புக்கு பிறகு கிட்டதட்ட 80,000 கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்று தள்ளியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் 80,000-க்கும் மேற்பட்டோர் கார்களை பற்றி விசாரித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மாருதி கார்களை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவதற்கு பின்னால் அவர்களின் யுக்தி ஒன்றும் உள்ளது. கார்களை அந்நிறுவனம் வெறும் ₹1,999க்கு EMI-யில் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Similar News
News September 27, 2025
இயக்குநராக களமிறங்கிய சூர்யாவின் மகள்

நடிகர் சூர்யாவின் மகள் தியா ‘லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த ஆவணக் குறும்படம், பாலிவுட் லைட்வுமன்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது. ‘லீடிங் லைட்’ படத்தை சூரியாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. ஆஸ்கர் போட்டிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (செப் 26) முதல் அக்டோபர் 2 வரை இப்படம் திரையிடப்படுகிறது.
News September 27, 2025
முதலமைச்சர் பாதுகாப்புக்காக 110 AI கேமராக்கள்

சென்னையில் உள்ள CM ஸ்டாலின் வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 110 AI கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் கமிஷனர் ஆபிஸில் அமைக்கப்படுகிறது. சந்தேகத்துக்குரிய நபர்கள் CM வீட்டருகே சென்றாலோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி சென்றுவிடுமாம்.
News September 27, 2025
வரலாற்றில் இன்று

1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவி ரயில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1933 – நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்.
1959 – ஜப்பானின், ஒன்சூ தீவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1998 – கூகுள் தேடுபொறி தொடங்கப்பட்ட நாள்.