News March 5, 2026
கார்களின் விலை சரசரவென குறைந்தது

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. ஹோண்டா தனது கார்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹57,000 முதல் அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.
Similar News
News April 7, 2026
சிறு, குறு நிறுவனங்களுக்கு அரசின் HAPPY NEWS

போரினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ₹2.5 லட்சம் கோடி கடன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி, போரால் பாதிக்கப்பட்டு நிறுவனங்களால் கட்டமுடியாத நிலை ஏற்பட்டால், ₹100 கோடி வரையான கடன்களுக்கு, 90% வரை அரசு உத்தரவாதம் வழங்கும். கோவிட் காலத்திலும் தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க இதுபோன்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.
News April 7, 2026
அவர் என்ன MGR-ஆ.. PTR தான? சுந்தர் சி

ஜெயிக்கவே முடியாது என சொல்ல PTR என்ன MGR-ஆ? என சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக என்பது அசைக்க முடியாத கட்சி இல்லை என்ற அவர், பலமாக இருப்பதை போல காட்டிக்கொள்வதுதான் அவர்களின் பலமே என விமர்சித்துள்ளார். மேலும், NDA கூட்டணி அன்பால் சேர்ந்த கூட்டணி எனவும், திமுக கூட்டணியில் கூச்சலும் குழப்பமும் இருப்பதால், அது ‘பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனால், பேஸ்மெண்ட் வீக்கான கூட்டணி’ எனவும் கிண்டலடித்தார்.
News April 7, 2026
சருமம் பொலிவா இருக்கணுமா? இத குடிங்க!

பெரிய செலவு எதுவும் இல்லாமலே சருமத்தை பொலிவாக்க அற்புத பானம் உள்ளது. ➤இதற்கு, இரவு முழுவதும் நீரில் உலர் திராட்சையை ஊறவையுங்கள் ➤அந்த நீரை அடுத்தநாள் காலை குடிக்க வேண்டும். இதனால், ➤சருமத்திற்கு இயற்கை பளபளப்பு கிடைக்கும் ➤பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளின் அடையாளங்கள் மறையும் ➤தூக்கத்தையும் நன்கு மேம்படுத்தும் என்பதாலும் கூட சருமம் பொலிவு பெறும் என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.


