News November 13, 2025

காரைக்குடி: வாக்காளர் படிவங்களை பெற தொடர்பு எண்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்கள் (SIR) வீடு தோறும் கடந்த 5 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. சில வீடுகளில் வாக்காளர்கள் 3 தடவை சென்றும்  வீட்டில் இல்லாத காரணத்தால் அவரவர்கள் வாக்காளர் பட்டியலை 18002339985 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என காரைக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.  

Similar News

News November 13, 2025

சிவகங்கை மாவட்ட இளைஞருக்கு துபாயில் பரிசு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த சாந்தகுமார் என்ற இளைஞர் உலகளவில் புகைப்படத் துறையில் பல சாதனைகள் புரிந்துநேற்று 12/11/25 புதன்கிழமை துபாயில் நடந்த புகைப்பட போட்டியில் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு ரூபாய் 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

News November 13, 2025

சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; ஜாமீன் ஒத்திவைப்பு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் 3 பேர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவ.19க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

News November 13, 2025

சிவகங்கை: 12th போதும்., கிராம வங்கியில் சூப்பர் வேலை!

image

சிவகங்கை மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு இல்லை. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!