News September 8, 2025

காரைக்குடி வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

image

காரைக்குடி வழியாக ( வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு )எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் ( 06061 ) வரும் 10 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்தும் , வண்டி எண் ( 06062 ) 11 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தும் புறப்படும் இந்த இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்கள் காரைக்குடி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News September 9, 2025

சிவகங்கை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

image

சிவகங்கை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 9, 2025

சிவகங்கையில் வீடு புகுந்து செயின் பறிக்க முயற்சி

image

சிவகங்கை அருகே வண்டவாசியை சேர்ந்தவர் தனஸ்ரீ(22). இவர் வீட்டில் குழந்தையுடன் இருந்த போது ஒரு பெண் தண்ணீர் கேட்டு வந்துள்ளார். தண்ணீர் கொடுத்தபோது அந்த பெண் தனஸ்ரீ கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட தனஸ்ரீ வீட்டின் கதவை மூடினார்.கதவை திறக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவதாக அப்பெண் மிரட்டிய நிலையில் கதவை திறந்த நிலையில் அவர் தப்பியோடினார்.

News September 9, 2025

காரைக்குடி: பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

image

காரைக்குடி, பெரியார் நகரை சேர்ந்த வாணிஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மதுரை பாண்டி கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!