News March 23, 2025

காரைக்குடி: வரி கட்டாத கடைகளுக்கு சீல்

image

காரைக்குடி மாநகராட்சியில் ரூ.4 கோடியே 32 லட்சம் வசூலிக்க வேண்டியுள்ளது. வரி செலுத்துபவர்கள் இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24ம் தேதிக்குள் வரி பாக்கி செலுத்தாதவர்களின் வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தப்படும் என கமிஷனர் சித்ரா எச்சரித்துள்ளார்.

Similar News

News April 9, 2025

சிவகங்கையில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

image

சிவகங்கை வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்தலாம். இது தவிர <>இந்த இணையதளத்திலும்<<>> பதிவிறக்கம் செய்யலாம், என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அரசு பணியில் சேர விரும்புவோர்க்கு SHARE செய்து உதவவும்.

News April 9, 2025

சிவகங்கையில் பரவும் பொன்னுக்கு வீங்கி

image

கோடையில் மம்ப்ஸ் என்ற பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்றால் சிவகங்கையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். மம்ப்ஸ் என்ற வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காது மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.சிவகங்கையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதித்த குழந்தைகள் ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News April 8, 2025

சிவகங்கை: பொது விநியோக திட்ட முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் வருகின்ற (12.04.2025) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!