News December 7, 2025
காரைக்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியை சேர்ந்த சுப்பு என்பவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மலைப் பாம்பு இருப்பதாக காரைக்குடி தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர்
Similar News
News December 10, 2025
சிவகங்கை: வேலை இல்லையா.? அரசு வழங்கும் நிதியுதவி.!

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
காரைக்குடியில் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல்

காரைக்குடி ரயில்வே பாதுகாப்புப் படையினா் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நடைமேடை 1-இல் வந்த பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் சோதனை செய்த போது, மஞ்சள் நிற சாக்குப் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அதில் 10 கிலோ குட்கா இருந்த நிலையில் அதை கைப்பற்றி சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் வசம் ஒப்படைத்தனா். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


