News November 23, 2025
காரைக்கால்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 23, 2025
புதுவை: வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

புதுவை உழவர்கரை நகராட்சி பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணியுரியும் வணிக நிறுவனங்களில் உள்புகார் குழுவை ஒரு வாரத்தில் உருவாக்கி, அதனை ஷிபாக்ஸ் (https://shebox.wcd.gov.in/) என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அத்தகவலை நகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர் கரை நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
News November 23, 2025
புதுச்சேரி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News November 23, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலையாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என, யாரேனும் ஆசை வார்த்தைகள் கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி, வாட்ஸ் ஆப்பில் வரும் லிங்க் மற்றும் மெசேஜ்களை கிளிக் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளனர்.


