News January 10, 2026

காரைக்கால்: மருத்துவரின் வருகை தேதி மாற்றம்

image

காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து (16.1.2026) அன்று காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சிறப்பு மருத்துவர்களின் வருகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் (23.01.2026) வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாற்றப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 29, 2026

புதுவை: SI பணி உடற்தகுதி தேர்வில் 160 பேர் தேர்ச்சி

image

புதுவையில் காவல் துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 16,481 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 12,378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடந்து வருகிறது. 8ம் நாளான நேற்று 377 பேர் பங்கேற்ற நிலையில், 160 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

News January 29, 2026

புதுச்சேரி: போஸ்ட் ஆபீஸ் வேலை – தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE.<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 29, 2026

புதுச்சேரி: 3 பேரிடம் ரூ.5.92 லட்சம் மோசடி

image

வில்லியனுாரை சேர்ந்தவரிடம் ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி போலி ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.5 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதேபோல், வில்லியனுாரை சேர்ந்தவர், ரூ.50 ஆயிரம், சோம்பட்டைச் சேர்ந்தவர் ரூ.42 ஆயிரம் என மொத்தம் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!