News February 24, 2026
காரைக்கால்: மயில்களை விரட்டுவதற்காக புதிய கருவி

காரைக்காலில் உள்ள விளைநிலத்தில், இரை தேடி வரும் மயில்கள் பயிரை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதுத்துறை சேர்ந்த விவசாயி கணேசன் மயில்களை விரட்டுவதற்காக பிரத்யேக மயில் விரட்டி கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதில் காற்றில் சுழலக் கூடிய காற்றாடியில் மணிகளை கட்டி அதன் மூலம் எழுப்பும் ஒலியினால், மயில்கள் சேதப்படுத்துவதை தடுக்க முடியும் என விவசாயி தெரிவித்தார்.
Similar News
News February 24, 2026
ஜெயலலிதா பிறந்த நாள்: புதுச்சேரியில் மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டிட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது உருவப்படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் KSP ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
News February 24, 2026
புதுச்சேரி: 14 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் துறை உத்தரவிட்டது. அதன் பேரில், காவல்துறை அதிகாரிகள் அரசு துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதான் ஒரு பகுதியாக 14 குடிமைப் பணி அதிகாரிகளை அதிரடியாக இட மாற்றம் செய்து கவர்னர் கைலாஷ்நாதன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
News February 24, 2026
புதுச்சேரி: டிராக்டர் வாங்க 80% மானியம்!

புதுச்சேரி மக்களே, புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <


