News December 21, 2025

காரைக்கால்: சொத்துவரி செலுத்த அறிவுரை

image

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான 2025-26-ம் நிதியாண்டுக்கான வரியை தற்போது நகராட்சி வரி வசூலிப்போர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நிலுவை வரிதாரர்களுக்கு வீடு வீடாக நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரியை, உடனடியாக செலுத்திட வேண்டும் என நகராட்சி ஆணையம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 21, 2025

புதுச்சேரி: போலியோ முகாமை தொடக்கி வைத்த முதல்வர்

image

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கப்பட்டது. இந்த முகாமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். குழந்தைகள் அனைவரும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, 5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 21, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6,20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.மேலும் தகவலுக்கு: <>CLICK<<>> HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 21, 2025

புதுவையில் மத்திய அமைச்சர் சைக்கிள் பேரணி

image

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் முக்கியத் திட்டமான, “Fit India-Sundays on Cycle” நிகழ்ச்சியின் துவக்க விழா புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டமன்ற தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

error: Content is protected !!