News September 19, 2025
காரைக்கால்: கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதியில் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் நேற்று முன்தினம் கருணாநிதி புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய கடலுார் மாவட்டம், சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திகேயன், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
Similar News
News April 7, 2026
புதுச்சேரியில் ஜே.பி நட்டா சாமி தரிசனம்

புதுச்சேரிக்கு வருகை புரிந்த பாஜக மூத்த தலைவர் ஜே.பி நட்டா, இன்று மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று குறிப்பிட்டார். ஜே.பி நட்டாவின் வருகையை ஒட்டி மணக்குள விநாயகர் கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
News April 7, 2026
காரைக்காலில் இன்று முதல் மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் தேர்தல்கள் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்வது அவசியம் என்பதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாராயக்கடை, கல்லு கடை மற்றும் மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள் இன்று 7ஆம் தேதி முதல் வருகின்ற 9ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 7, 2026
புதுச்சேரி: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

புதுச்சேரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <


