News August 26, 2024
காரைக்கால் அருகே கஞ்சா விற்றவர் கைது

காரைக்கால் அடுத்த திருபட்டினம் காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்குப்புற வழிச்சாலையில் முகமது மீரான் சாஹிப் என்பவரை போலீசார் சோதனை செய்த போது 10 கிராம் வீதம் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாகக் கட்டி 300 கிராம் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் மீட்டு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

“தனியார் நிருவனத்தின் பெயரில், வணிக அரசின் உதவி திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள் என்ற பெயரில் போலி லிங்க் ஒன்று பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டால், உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் மோசடியாக எடுத்து ஏமாற்றி விடுகின்றனர். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 12, 2025
புதுவை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

புதுவை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <
News November 12, 2025
புதுவை: ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி வெட்டு!

வில்லியனுாரைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ், அவரது வீட்டின் தரை தளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சத்தியபிரகாஷ் மற்றும் ஓட்டலில் வேலை செய்யும் அமர்குமார் ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் அமர்குமாரை வெட்டியுள்ளார். அதனையடுத்து சத்யபிரகாஷையும் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றதாக வில்லியனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


