News May 24, 2024
காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில் இன்று பல்வேறு துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
புதுவை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
புதுச்சேரி: படகு குழாம்களில் இலவச படகு சவாரி!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 8-ம் தேதியான இன்று புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் அனைத்து மகளிர்களுக்கும் கட்டணமின்றி இலவச படகு சவாரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
புதுச்சேரி: பண மோசடியில் ஈடுபட்ட தாய் – மகன்!

பிரான்சில் வசித்து வரும் எழில்ராஜன்-கனிமொழி தம்பதியினர், புதுச்சேரியில் தங்களது நிலத்தை ரூ.19 லட்சத்திற்கு விற்றனர். அந்த பணத்தை கனிமொழியின் தாய் மற்றும் சகோதரன் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தை திருப்பிக் கேட்டபோது, சகோதரன் மிரட்டியதாக கனிமொழி புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், தவளக்குப்பம் போலீசார் சகோதரன் இளவரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


