News October 1, 2025
காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் ஆய்வு

காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடி மேடு சுனாமி நகரில் சுமார் 15 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய் மூலம் அப்பகுதிக்கு சரிவர குடிநீர் வழங்குவதில் இடர்பாடுகள் ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலம் புதிதாக குடிநீர் குழாய் அமைப்பதற்காக சுமார் 70 இலட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இடத்தையும், மதிப்பீட்டையும் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்கள்.
Similar News
News April 7, 2026
புதுச்சேரியில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடைசி நாளான இன்று (ஏப்.7) பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்ய வந்தவர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் யாரும் பிரச்சார நேரத்தை தாண்டி அப்பகுதிகளில் இருக்கக் கூடாது.
News April 7, 2026
புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News April 7, 2026
புதுச்சேரியில் ஜே.பி நட்டா சாமி தரிசனம்

புதுச்சேரிக்கு வருகை புரிந்த பாஜக மூத்த தலைவர் ஜே.பி நட்டா, இன்று மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று குறிப்பிட்டார். ஜே.பி நட்டாவின் வருகையை ஒட்டி மணக்குள விநாயகர் கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


