News May 10, 2024

காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு

image

காரைக்காலில், இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 8, 2025

10th போதும் இந்தியன் ரயில்வேயில் வேலை!

image

புதுவை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in என்ற இணையம்<<>> மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

புதுவையில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

புதுவை எம்.ஜி.ஆர்.நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (ஜூலை 9) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 10) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில் மூலக்குனம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், பாலாஜி நகர், ஜெயாநகர், ரெட்டி யார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படுமென கூறப்பட்டுள்ளது.

News July 8, 2025

85 ஆண்டுகளுக்குப் பின் கோயில் கும்பாபிஷேகம்!

image

புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது.1940ம் ஆண்டு 2வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!