News October 29, 2025
காரைக்காலில் புகையிலை ஒழிப்பு குறித்து ஆலோசனை

காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் புகையிலை ஒழிப்பு இயக்கத்திற்கான மாவட்ட பணிக்குழு கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் “புகையிலை இல்லா இளைஞர் இயக்கம்” குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காரைக்கால் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர். சிவராஜ்குமார், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 30, 2025
முதலியார் பேட்டை: போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை முதலியார் பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மதுபான கடை அருகே ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்ததை கண்டு அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முதலியார் பேட்டை சேர்ந்த மேகி (31) என்று தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News October 29, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளம்.. ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 29, 2025
புதுவை: இரவு நேரத்தில் பெண்கள் பணியாற்ற தடை

புதுச்சேரி தொழிலாளர் துறை செயலர் சுமித்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை எந்த தொழிற்சாலைகளிலும், பெண்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது. மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு, இரவு 10 மணி வரை, அவர்களின் வீட்டுக்கு செல்ல வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


