News March 3, 2026

காரைக்காலில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காரைக்காலில் மின்னழுத்த பாதையில் இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

Similar News

News April 9, 2026

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

image

புதுச்சேரி சட்டப்பேரவை 2026 தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்றது. காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

News April 9, 2026

புதுச்சேரி: வாக்கு செலுத்திய காங்கிரஸ் தலைவர்

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.பி. வைத்திலிங்கம் தனது வாக்கினை செலுத்தினார். அவர் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். மேலும் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News April 9, 2026

புதுச்சேரி: 86.87% வாக்குப் பதிவு

image

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, மொத்தமாக 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீங்கள் வாக்கு செலுத்திடிங்களானு கமெண்டில் சொல்லுங்கள்!

error: Content is protected !!