News April 13, 2025
காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தியிலே உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News February 14, 2026
தி.மலை: கோர விபத்து ; பலியான சிறுவர்களுக்கு ரூ.3 லட்சம்

இளங்காடு கிராமத்தில் பழைய வீட்டை இடிக்கும்போதும் எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவளித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.
News February 14, 2026
தி.மலையில் உடல் நசுங்கி பரிதாப பலி!

போளூரில் இருந்து வந்தவாசிக்கு பொருட்களை ஏற்றி வந்த லாரி, பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆவணவாடி கிராம கூட்டுச் சாலைப் பகுதியில், லாரியும் மற்றொரு மினி வேனும் மோதிக்கொண்டன. இதில், மினி வேன் டிரைவர் அசாருதீன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில், அதிவேகமாக லாரியை இயக்கிய டிரைவர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
News February 14, 2026
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


