News January 12, 2025

காரில் 250.கி புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது

image

ரோஷணை காவல் ஆய்வாளர் தரணேசுவரி தலைமையிலான போலீசார், திண்டிவனம் – வந்தவாசி நெடுஞ்சாலையில், பட்டணம் கூட்டுச் சாலை அருகே நேற்று (ஜன.11) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரில் புகையிலை பொருள் கடத்தியதும், அவர்கள் மதுராந்தகத்தை சேர்ந்த பூ.ஜோதிராஜ் (32), தனசேகரன் (42) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலைப் பொருள்களை  போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 9, 2025

செங்கல்பட்டு: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

செங்கல்பட்டு மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு 300 காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும். 21-30 வயதுள்ளவர்கள் டிச.15ஆம் தேதிக்குள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

செங்கல்பட்டு: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!