News January 21, 2026
காரில் கடத்திவரப்பட்ட கள்ள நோட்டுகள் பறிமுதல்

திருவெறும்பூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.8,37,800 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ (54) மற்றும் நாராயணராம் (34) ஆகிய இருவரையும் பிடித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
திருச்சி: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News January 22, 2026
திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
திருச்சி: தொழில் முனைவோர் பயிற்சிகள் அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள், மதிப்பு கூட்டல் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு திருச்சி மாவட்ட திட்ட மேலாளர் கார்த்திகேயன் (8610687193) என்பவரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


