News March 29, 2024
காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News February 1, 2026
திருவள்ளூர்: வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

திருவள்ளூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 1, 2026
திருவள்ளூரில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நெடுஞ்சாலைகள் துறை (க (ம) ப) சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர் . இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் நேற்று ஜன.31 கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News February 1, 2026
திருவள்ளூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


