News September 6, 2025
காரிமங்கலம் மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (செப்.6) பார்வையிட்டார். அப்போது, அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News September 7, 2025
தர்மபுரி: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். இங்கு <
News September 7, 2025
தருமபுரி: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (04342-230000). ஷேர் பண்ணுங்க
News September 7, 2025
தர்மபுரியில் காவலர் தினம் கொண்டாட்டம்

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பணியின் போது உயிரிழந்த தருமபுரி மாவட்ட போலீசார் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. மகேஸ்வரன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.