News April 18, 2025
காரமும் மணமுமிக்க விளாத்திகுளம் முண்டு வத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மானாவாரி பயிர்களான வத்தல், மக்காச்சோளம், பாசிப்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளைவிக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.
Similar News
News December 3, 2025
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு நீதிமன்றம் ஜாமின்

ஸ்ரீவைகுண்டம் காவல் சரகத்திற்கு டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த முன்னாள் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தூத்துக்குடி வின்சென்ட் லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர் 9 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்துள்ளது.
News December 3, 2025
தூத்துக்குடி மக்களே.. எஸ்.பி முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம் இன்று (டிச.3) காலையில் எஸ்.பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் நடக்கிறது. இதில், காவல் நிலையங்களில் அளித்த மனுக்களின் விசாரணையில் திருப்தி இல்லாதோர், 3 மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். என மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட்ஜான் தெரிவித்து உள்ளார். SHARE
News December 2, 2025
தூத்துக்குடி: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


