News January 24, 2026

காய்ச்சலின் போது குழந்தைகள் குளிக்கலாமா?

image

குழந்தைகளுக்கு ஜுரம் வந்தால் குளிக்கலாமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் சேரும் பாக்டீரியாக்களை நீக்கவும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், சாதாரண காய்ச்சலுக்கு மட்டுமே இது பொருந்தும். SHARE IT.

Similar News

News February 2, 2026

டிகிரி போதும்.. ₹48,480 சம்பளம்.. இன்றே கடைசி

image

யூகோ வங்கியில் 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும் *20- 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் *எழுத்துத் தேர்வு, குழு விவாதம் & நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும் *₹48,480 – ₹93,960 வரை சம்பளம் *விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். *விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

News February 2, 2026

விவாகரத்து செய்தால் ₹27 கோடியா?

image

கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்தால் ₹27 கோடி தருவதாக, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் US-ஐ சேர்ந்த CEO தமீர் போலெக் டீல் பேசியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி விவாகரத்து செய்த அப்பெண்ணுக்கு சொன்ன தொகையுடன், ₹13 கோடி மதிப்பிலான வீட்டையும் போலெக் வழங்கியுள்ளாராம். உலகம் முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளான நிலையில், பணம் பத்தும் செய்யும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

News February 2, 2026

விடாப்பிடி காங்கிரஸ்… மறுக்கும் திமுக

image

‘கூட்டணி ஆட்சி’ என்ற முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்ற காங்., இந்த முறை 35 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளதாம். ஆனால், கூட்டணி ஆட்சி, 35 தொகுதிகள் என்ற காங்கிரஸின் கோரிக்கைகளை நிராகரித்த திமுக தலைமை, கடந்த தேர்தலை விட கூடுதலாக 3 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!