News January 1, 2026
காய்கறிகளின் விலை மளமளவென குறைந்தது

புத்தாண்டு நாளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேட்டில், 1 கிலோ பெரிய வெங்காயம் ₹30-க்கும், சின்ன வெங்காயம் ₹60 – ₹75-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதேபோல், தக்காளி(₹40-₹50), உருளை கிழங்கு(₹20-₹25), பீன்ஸ்(₹30-₹40), கேரட்(₹40-₹45), பச்சை மிளகாய்(₹30-₹35) உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. இதேபோல், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் வழக்கத்தைவிட காய்கறிகளின் விலை குறைவாகவே உள்ளது.
Similar News
News January 24, 2026
உங்கள் பெண் குழந்தைகளை இப்படி வளருங்க!

பெண் குழந்தைகளை கொண்டாடினால் மட்டும் போதுமா? அவர்களை மதிக்கவும் வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மகள் பிறந்தால் ஒரு குடும்பம் மட்டுமல்ல, சமூகமே வளருகிறது. அவர்களுக்கு அனைத்திலும், சம பங்கு, சம உரிமை, கல்வி, பாதுகாப்பு, மரியாதையை கொடுத்து பழகுங்கள். அவளின் அந்த சிரிப்பும், குழந்தைத்தனமும் என்றும் மறையாமல் ஒரு நல்ல சமூகமாக பார்த்துக்கொள்வோம். Happy National Girl Child Day!
News January 24, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 24, 2026
தமிழகத்தில் 2,016 சாலை விபத்துகள்.. மிக கவனம்

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் சாலை விபத்துகளில் 48 பேர் உயிரிழப்பதாக தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஆண்டுக்கு சுமார் 17,000 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த ஜூன் மாத விபத்துகள் தொடர்பான மத்திய அரசு அறிக்கையின்படி, அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2,016 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.


