News February 13, 2026

காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் இன்று காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து இல்லத்தரசிகளையும், ஹோட்டல் உரிமையாளர்களையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தக்காளி 1 கிலோ ₹25, சின்ன வெங்காயம் ₹40, உருளைக் கிழங்கு ₹45 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று தக்காளி ₹15 (kg), சின்ன வெங்காயம் & உருளை ஆகியவை கிலோ ₹30 என விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு என்று கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News February 17, 2026

TN ELECTION: தேர்தல் ஆணையம் அதிரடி அப்டேட்

image

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் CEC ஞானேஷ்குமார் உள்பட 3 பேர் தலைமையிலான குழு இம்மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரிக்கு வரும் என கூறப்படுகிறது. இவர்கள் மாநில தேர்​தல் ஆணை​யர், தலைமை செய​லா​ளர், DGP, கலெக்டர்கள், போலீஸ், அரசி​யல் கட்​சி​யினர் ஆகியோரை சந்​தித்து ஆலோ​சனை நடத்​தவுள்ளனர்.

News February 17, 2026

திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை: திருமா

image

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதில் விசிக உறுதியாக இருப்பதாக திருமா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் வலதுசாரிகளின் கைகள் ஓங்கி விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்புவதன் மூலம் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு பலவீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; அதேநேரம் கைவிடவும் இல்லை என்றார்.

News February 17, 2026

DMK அரசுக்கு எதிராக பிப்.21-ல் BJP போராட்டம்

image

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாக நயினார் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்களை அழிக்கும் போதைப்பொருள் கும்பல்களை தடுக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர், போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கொள்கைகளை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் பிப்.21-ல் TN முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!