News November 10, 2025
காயமடைந்தவர்களை நேரில் சந்திக்க உள்ள அமித் ஷா

டெல்லி கார் வெடிப்பு குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் செங்கோட்டை அருகே வெடித்தது ஹூண்டாய் I20 என்றும், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
DNA சோதனை செய்ய வேண்டும்: மாதம்பட்டி ரங்கராஜ்

தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, மாதம்பட்டி ரங்கராஜ் HC-ல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு DNA சோதனை செய்ய வேண்டும் என ரங்கராஜ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் DNA பரிசோதனையில் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை முழுவதும் ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
ஆண்மையை இழக்க நேரிடும்: ஆண்களே இதை செய்யாதீங்க!

சாதாரண விஷயம் என்று நீங்கள் அலட்சியமாக செய்யும் சில விஷயங்கள், உங்கள் எதிர்காலத்துக்கே ஆபத்தாக வந்தால் என்ன செய்வீர்கள்? ஆம், கவனமாக இல்லையெனில் உண்ணும் உணவு முதல் அணியும் ஆடை வரை பல பழக்கங்கள் ஆண்மைக் குறைவுக்கு காரணமாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மேலே படங்களாக தொகுத்து வழங்குகிறோம். அவற்றை தவிர்த்து ஆரோக்கிய வாழ்க்கை வாழுங்கள். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணலாமே!
News November 10, 2025
நாட்டை உலுக்கிய துயரம்… PM மோடி இரங்கல்

டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி சம்பவம் குறித்து அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.


