News March 8, 2026
காமெடி நடிகர் கோரி பார்கர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘Love Boat’, ‘Will & Grace’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் கோரி பார்க்கர்(60) காலமானார். நடிப்பு மட்டுமின்றி மேடை நாடகத்திலும் நகைச்சுவை வேடங்களில் அசத்தி வந்த கோரி பார்க்கர், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக திரைப்பிரபலங்கள் பலரும் கேன்சர் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். So sad!
Similar News
News March 8, 2026
பெண் போராட வேண்டியிராத உலகை படைப்போம்: கமல்

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும்,
ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 8, 2026
விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி..

‘ஆட்சியில் பங்கு’ என்ற அஸ்திரத்தை விஜய் வீசியதால், பல கட்சிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டின. ஆனால் இதுவரை, எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள விஜய், தவெகவை நெருங்கி வந்த கட்சிகளுடன் உரிய முறையில் பேசி கூட்டணியில் சேர்க்காமல் இப்படி நமக்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டுவிட்டீர்களே என்று ஆதவ் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 8, 2026
அஜித்குமார் போல் மற்றொரு மரணம்.. அடுத்த பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 6-ம் தேதி மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான ஆகாஷ், சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஆகாஷை போலீசார் அடித்து கொன்றதாக அவரது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.


