News February 8, 2026
காமராஜரால் முடியாததை திமுக செய்தது: துரைமுருகன்

குடியாத்தம் தொகுதி MLA-வாக காமராஜர் இருந்தபோது மோர்தானா அணையை கட்ட முயன்றார். ஆனால், நிதி இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால், அதன்பின், திமுக ஆட்சியில்தான் அந்த அணை கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார். அத்துடன், இதுவரை 90 அணைகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டு பேசினார்.
Similar News
News February 17, 2026
TN ELECTION: தேர்தல் ஆணையம் அதிரடி அப்டேட்

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் CEC ஞானேஷ்குமார் உள்பட 3 பேர் தலைமையிலான குழு இம்மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரிக்கு வரும் என கூறப்படுகிறது. இவர்கள் மாநில தேர்தல் ஆணையர், தலைமை செயலாளர், DGP, கலெக்டர்கள், போலீஸ், அரசியல் கட்சியினர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
News February 17, 2026
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை: திருமா

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதில் விசிக உறுதியாக இருப்பதாக திருமா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் வலதுசாரிகளின் கைகள் ஓங்கி விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்புவதன் மூலம் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு பலவீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; அதேநேரம் கைவிடவும் இல்லை என்றார்.
News February 17, 2026
DMK அரசுக்கு எதிராக பிப்.21-ல் BJP போராட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாக நயினார் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்களை அழிக்கும் போதைப்பொருள் கும்பல்களை தடுக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர், போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கொள்கைகளை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் பிப்.21-ல் TN முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.


