News June 16, 2024
காந்தி மியூசியத்தில் இலவச யோகா பயிற்சி

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 காலை 7:00 முதல் 7:40 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் எனவும் பயிற்சிகள் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவதாசை 99941 23091ல் தொடர்பு கொள்ளலாம் என காந்தி மியூசிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 2, 2026
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

பிரதமர் மோடி நேற்று மதுரை வந்து சென்ற நிலையில், மதுரை தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
News March 2, 2026
மதுரை: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு.!

சோழவந்தான் அருகே கீழ நாச்சிகுளத்தை சேர்ந்தவர் நபிஷா (70). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பாக அமர்ந்து பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார். வீட்டு அருகில் அடர்த்தியாக புதர் மண்டியிருந்த பகுதியிலிருந்து வெளிவந்த பாம்பு மூதாட்டியை தீண்டியது. மயங்கி விழுந்த மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
News March 2, 2026
மதுரை: கார் – வேன் மோதல்; ஒருவர் பரிதாப பலி.!

மதுரை சிக்கந்தர் சாவடி பொற்கொடி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சவாரி சென்று விட்டு திரும்பி வருகையில், வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இவர் கார் மீது எதிரே வந்த பால் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


