News June 5, 2024

காத்து வாங்கிய அதிமுக தலைமை அலுவலகம்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக நேரடியாக 32 இடத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில் தென்சென்னை, மத்திய சென்னையில் 3ஆவது இடம், வடசென்னையில் 2ஆம் இடம் பிடித்தனர். இதனால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமல் காத்து வாங்கியது. அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை கமெண்ட் செய்யவும்.

Similar News

News August 22, 2025

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (22.08.2025) திருவொற்றியூர் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட், வளசரவாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 11 மண்டலங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News August 21, 2025

சென்னையில் சுய தொழில் துவங்க ஆசையா? SUPER CHANCE!

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் செப்.1ம் தேதி முதல் 3ம் தேதி வரை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற<> www.editn.in<<>> என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். சுய தொழில் தொடங்க செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News August 21, 2025

ரகுமான் கானின் நூல்கள் வெளியீடு

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!