News December 30, 2025
காதலியை கரம்பிடிக்கிறார் பிரியங்கா காந்தி மகன்!

பிரியங்கா காந்தி-ராபர்ட் வதேராவின் மகனான ரெய்ஹானுக்கு தனது 7 வருட காதலியான அவிவா பெய்க்குடன் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 வயதான ரெய்ஹான் தொழில்ரீதியான புகைப்பட கலைஞர் ஆவார். ஏற்கெனவே ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற பெயரில் தனிநபர் கண்காட்சிகளை நடத்தி அவர் பாராட்டுகளை பெற்றுள்ளார். அதேபோன்று அவரது காதலி அவிவாவும் புகைப்படக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 10, 2026
விரைவில் சம்பளம் ₹15,000 வரை உயருகிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியமும் ஜனவரி இறுதிக்குள் உயரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க 8-வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, 2.57 Fitment Factor அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய அடிப்படை சம்பளம் ₹18 ஆயிரமாக இருந்தால் 1.92 Fitment Factor அடிப்படையில் ₹34 ஆயிரம் வரை உயரலாம். SHARE IT.
News January 10, 2026
நான் ரியல் ஜனநாயகன்: சீமான்

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து <<18812153>>CM ஸ்டாலின்<<>> குரல் எழுப்பியிருந்தார். இதற்கு ரியாக்ட் செய்த சீமான், TN-ல் ஆசிரியர்கள் போராட்டம் என பல பிரச்னைகள் இருப்பதாகவும், அதை பற்றி பேசாமல் ஜனநாயகன் பிரச்னை தான் முதன்மையான பிரச்னையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ரீல் ஜனநாயகனை விட்டுவிட்டு களத்தில் இருக்கும் தன்னை போன்ற ரியல் ஜனநாயகனை CM கண்டுகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
News January 10, 2026
பொங்கல் பண்டிகை.. ஒரு கிலோ ₹10,000

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்தவகையில், மல்லிப்பூவின் விலை கிலோவுக்கு ₹10,000 வரை அதிகரித்து விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிப்பூ ₹8,000 வரையிலும், மதுரையில் ₹8,000 – ₹12,000 வரையிலும் விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் மல்லிப்பூ விலை என்ன?


