News January 9, 2026
காணாமல் போன போன், அடுத்து நடந்ததை பாருங்க!

மொபைல் போனை தொலைத்துவிட்டால், அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம் என்றுதான் நினைப்போம். அப்படித்தான், பெங்களூருவில் போனை தொலைத்துவிட்ட கல்லூரி மாணவி ஒருவர், எதற்கும் இருக்கட்டுமே என்று போலீஸின் ‘112’ நம்பருக்கு போன் செய்து புகாரளித்தார். அட, என்ன ஆச்சரியம்! 8 நிமிடத்தில் அங்குவந்த போலீஸ், GPS உதவியுடன் உடனே போனை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். ஆகவே, போன் தொலைந்தால் புகார் அளிக்க தயங்காதீர்.
Similar News
News January 27, 2026
ரயில் தாமதத்தால் மாணவிக்கு ₹9 லட்சம் இழப்பீடு!

ரயில் தாமதத்தால் மாணவிக்கு ₹9.10 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. UP-ன் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்தவர் சம்ரிதி. கடந்த 2018-ம் ஆண்டு இவர் புக் செய்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் லக்னோவில் நடந்த BSc நுழைவுத் தேர்வை எழுத முடியவில்லை. இதற்காக அவர் நுகர்வோர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தான், அடுத்த 45 நாட்களுக்குள் இழப்பீடு செலுத்தக்கோரி 7 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது.
News January 27, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 27, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *நீங்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால், வானவில்லைக் காண முடியாது. *உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம். *வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட கலைப் படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன. *கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும், நிறைய காயங்களுக்கு பிறகு.


