News November 25, 2025
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு!

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 25) காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 27, 2025
வேலூர்: 15 லட்சத்திற்கு வாகனங்கள் பொது ஏலம்!

வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் நேற்று (நவ.27) நடந்தது. இந்த ஏலத்தை எஸ்.பி. மயில்வாகனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 66 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 15 லட்சத்து 20 ஆயிரத்து 448 ரூபாய்க்கு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
News November 27, 2025
வேலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

வேலூர், இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
வேலூர்: திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. பரபரப்பு!

வேலூர், குடியாத்தம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


